Monday, 5 July 2010

இயற்கை இன்பம்

வாழும் உலகம் ஒன்றே இந்த வையத்து மானிடரும் ஒன்றே !
சூழும் கடலும் சுற்றி ஓடும் சூரியனும் சந்திரனும் ஒன்றே !
நாளும் கிழமையும் நாடி விநாடி என நம் கணக்கும் ஒன்றே!
பாழும் உலகம் இது என ,பேசும் பலரின் மொழிவழி பார்வையும் ஒன்றாம் !
விலங்கியல் வாழ்வும் வளர்நிலை கண்ட மனிதனு ம் ஆதியில் ஒன்றாம்!
இலங்கியல் உலகில் ,பிறந்தார் வாழ்வதும் ஒருமுறை என்பது தானே ?
கலங்கிய மனது உடையவர் சிலரோ காண்பதும் ஒருவகை கனவுதானோ ?
வழங்கிய உயிர் வாழ்வும் உலகமு ம் இயற்கை தந்து இங்கு !

No comments: